NISAR Satellite: `நிசார் செயற்கை கோள்’ – நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?

நிசார் செயற்கைக்கோள் (NISAR Satellite) இந்தியா மற்றும் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டுத் திட்டமாகும். இது இயற்கை வளங்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் துல்லியமான தரவுகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

NISAR செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்கள்:

இந்தியா – அமெரிக்கா கூட்டுத் திட்டம்

  • NISAR என்பது ISRO (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) மற்றும் NASA (அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்) இணைந்து தயாரித்த முதல் பெரிய செயற்கைக்கோள் திட்டம்.

NISAR Satellite
NISAR Satellite

ஒப்பந்தமும் – பணி நிறைவும்

  • NISAR செயற்கைக் கோளுக்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. பின்னர், ரூ.12,000 கோடியில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.

இரட்டை ரேடார் தொழில்நுட்பம் (Dual Frequency Radar)

  • இது L-Band (NASA) மற்றும் S-Band (ISRO) ரேடார்களை ஒரே செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருக்கிறது. இப்படி உருவாக்கப்பட்ட செயற்கைகோள்களில் உலகிலேயே இதுவே முதல் செயற்கைக்கோள்.

புவியியல் மாற்றங்களை கண்காணிக்கும்

  • பூமியின் நிலம், நிலச்சரிவு, பனிக்கட்டிகள் உருகுதல், நிலக்காட்சி மாற்றங்கள் போன்றவற்றை துல்லியமாக கண்காணிக்கும்.

புவி சுற்றிவட்ட பாதையில் பயணம்

  • NISAR, பூமியை 12 நாட்களில் ஒருமுறை முழுமையாக சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நிலநடுக்கம் மற்றும் பனிக்கட்டி உருகுதல் குறித்து எச்சரிக்கைகள்

  • பெரும் பனிக்கட்டங்கள் உருகுதல், நிலநடுக்கம் ஏற்படும் இடங்களை முன்கூட்டியே கணிக்க உதவும்.

வள மேம்பாட்டுக்கான பங்களிப்பு

  • விவசாய நில வரம்புகள், காடுகள், நீர்நிலைகள் போன்றவற்றை கண்காணித்து நீர்வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்கு உதவுகிறது.

NISAR Satellite
NISAR Satellite

பசுமை நில கண்காணிப்பு (Carbon Sink Monitoring)

  • காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் மூலம் பூமி கார்பன் உறிஞ்சும் அளவை கண்காணிக்கிறது.

3 சென்டிமீட்டர் வரை துல்லியம்

  • பூமியின் நில மாற்றங்களை மிக அருகிலும் (3–4 cm) வரை பதிவு செய்யக்கூடிய திறன் கொண்டது.

முழு உலக அளவில் தரவுகள்

  • NISAR தரவுகள் உலகின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கும் என்பதால், விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு சிறந்தவையாக இருக்கும்.

விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜூலை 30 மாலை 5.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்னர் 745 கி.மீ. உயரத்தில், திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆயுள் காலம்

  • மொத்தம் 2,392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR