Modi: “ட்ரம்ப் முன்னாடி 56 இன்ச் மார்பு 36-ஆக சுருங்கிடுது” – மோடியை மக்களவையில் விமர்சித்த TMC MP

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் பெரிதாக வெடிக்கும் என்று அச்சப்பட்ட சூழலில், இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலாவதாகத் தெரிவித்தார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

“வர்த்தகத்தை முன்வைத்து மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டுவந்தேன்” எனத் தொடர்ச்சியாக ட்ரம்ப் கூறிவந்தார்.

இதனால், எதற்காக ட்ரம்ப் இதில் மத்தியஸ்தம் செய்கிறார் என்றும் மத்திய அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

மத்திய அரசோ, ட்ரம்ப் கூறியதால் இந்த மோதலை நிறுத்தவில்லை என நேரடியாகக் கூறாமல் மழுப்பி வந்தது.

ஆனாலும், 20 முறைக்கும் மேலாக, “நான்தான் மோதலை நிறுத்தினேன்” என ட்ரம்ப் இன்னமும் கூறியவண்ணமே இருக்கிறார். பிரதமர் மோடியும் இதை ஒருமுறைகூட மறுத்துப் பேசவில்லை.

இவ்வாறிருக்க, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஆபரேஷன் சிந்தூர் பற்றி மக்களவையில் விவாதத்துக்கு முன்வந்தது மத்திய அரசு.

அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறினார்.

அப்போதும், ட்ரம்ப் கூறுவது பற்றி ஒரு வார்த்தைகூட ராஜ்நாத் சிங் பேசவே இல்லை.

கூடவே, பஹல்காம் தாக்குதல் எப்படி நிகழ்ந்தது, தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினர் என்பது குறித்தும் வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, அமெரிக்க அதிபரைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள் என்று மோடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மக்களவையில் பேசிய கல்யாண் பானர்ஜி, “பிரதமர் மோடி அவர்களே, அமெரிக்க அதிபர் கூறுவது தவறு என்று ஏன் ஒருமுறைகூட உங்களால் எக்ஸ் தளத்தில் பதிவிட முடியவில்லை.

அமெரிக்க அதிபர் முன் நீங்கள் நிற்கும் தருணத்தில் உங்களுடைய உயரம் 5 அடியாகக் குறைந்துவிடுகிறது. 56 இன்ச் மார்பு 36 இன்ச் எனச் சுருங்கிவிடுகிறது.

அமெரிக்க அதிபரைப் பார்த்து உங்கள் ஏன் இவ்வளவு பயம்?” என்று கேள்வியெழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk