Operation Mahadev: “ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..” – இந்திய ராணுவம் சொல்வதென்ன?

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தது.

இதற்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தி, பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

மே 7-ம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதல், பாகிஸ்தான் எதிர்வினையாற்ற, மே 10-ம் தேதி வரை தொடர்ந்தது. இரு நாடுகளும் பேசி, மே 10-ம் தேதி இந்தத் தாக்குதலை இறுதிக்கு கொண்டு வந்தது.

Operation Mahadev: இந்திய ராணுவம்
Operation Mahadev: இந்திய ராணுவம்

இன்று இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ஆபரேஷன் மஹாதேவ். லிட்வாஸின் பொது பகுதியில் ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது” என்று முதலில் பதிவிட்டிருந்தது.

அடுத்த பதிவில், ‘தீவிர சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்னும் ஆபரேஷன் தொடர்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கு லிட்வாஸ் பகுதியில் தற்போது ஆபரேஷன் மஹாதேவ் என்ற பெயரில் தீவிரவாதிகளைக் குறி வைத்து வருகிறது இந்திய ராணுவம்.

தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.