மாலத்தீவில் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் இவர், இன்றிரவு தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ. 4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
முக்கியமாக, தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை (ரூ. 450 கோடி) திறந்து வைப்பார். விழா நடைபெறும் மேடைக்கு பிரதமர் மோடி வந்தவுடன் அவருக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை அமைச்சர் தங்கம் தென்னரசு பரிசளித்தார்.