கடந்த திங்கள்கிழமை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருந்தே பணிகளை தொடர்ந்து வருகிறார்.
”திமுக-வினர் களத்தில் ஓய்வின்றி பணியாற்றி வருவதால், மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் மருத்துவமனையில் ஓய்வெடுக்க விருப்பமில்லை” என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருப்பதாவது: “கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை.
உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!” என குறிப்பிட்டுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!
உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150… pic.twitter.com/bFLBEquzGp
— M.K.Stalin (@mkstalin) July 26, 2025