சீனா: ”இது முதல் குழந்தை அல்ல…” – பல்கலைக்கழக தங்கும் விடுதியில் குழந்தை பிரசவித்த மாணவி!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, தனது தங்கும் விடுதி அறையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக குழந்தை பெற்றெடுத்த சம்பவம், பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இதழின் அறிக்கை படி, 20 வயதான பல்கலைக்கழக மாணவி, இறுதித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தபோது குழந்தையை பிரசவித்துள்ளார்.

தனது பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது, நள்ளிரவில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

Medical termination of Pregnancy

மாணவியின் நிலையை உணர்ந்து, அறைத் தோழி உடனடியாக அவசர மருத்துவ சேவைகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால் மருத்துவக் குழு வந்து சேரும் முன்பே, குழந்தை பிறந்திருக்கிறது.

அறைத் தோழி இந்த சம்பவத்தின் போது அமைதியாக இருந்தது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. “இது அவளுக்கு முதல் பிரசவம் இல்லை,” என்று அவர் கூறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. பின்னர், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது, இது தான் அவரது அமைதிக்கு காரணமாக இருந்ததுள்ளது.

பிறந்த குழந்தையின் எடை 4.5 கிலோவாக இருந்துள்ளது. இது மருத்துவ ரீதியாக “பெரிய குழந்தை” என்று வகைப்படுத்தப்படுகிறது.

தாய்க்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததுள்ளது. கர்ப்பிணி மாணவி தங்கும் விடுதியில் மேற்பார்வையின்றி இருந்தது எப்படி என்று மருத்துவ ஊழியர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஆனால் அந்த மாணவி காலையிலேயே மருத்துவமனைக்கு வர இருந்ததாக கூறியிருக்கிறார். மருத்துவ நிபுணர்களின் விரைவான சிகிச்சையால், தாயும் குழந்தையும் தற்போது பாதுகாப்பாக மீண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.