`Final Destination Bloodlines படத்தில் ஒரு காட்சியில், கற்பனைக் கூட செய்ய முடியாதளவு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
நியூயார்க்கின் லாங் தீவில் உள்ள வெஸ்ட்பரியில் உள்ள நாசாவ் ஓபன் எம்.ஆர்.ஐ செயல்பட்டு வருகிறது. முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்றுவரும் அட்ரியன் ஜோன்ஸ் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தன் முழங்காலை ஸ்கேன் செய்திருக்கிறார். அப்போடு எழுந்திக்க, அவரின் 61 வயது கணவரை உதவிக்காக அழைத்திருக்கிறார்.
அப்போது அவர் கழுத்தியில் இரும்பு செயின் ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்கு வந்தவுடன் அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இதில் நிலைகுலைந்துப்போன அவரைக் காப்பாற்ற அறையில் இருந்த உதவியாளர்கள் முயன்றும் பலனளிக்கவில்லை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, “பாதிக்கப்பட்ட நபர் அனுமதி இன்றி எம்.ஆர்.ஐ அறைக்குள் நுழைந்திருக்கிறார். கழுத்தில் ஒரு பெரிய உலோகச் சங்கிலியை அணிந்திருந்தார், இதனால் அவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கிறார்” என்றது.
தன் கணவரைப் பலி கொடுத்த ஜோன்ஸ்-மெக்காலிஸ்டர், “நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது இது முதல்முறையல்ல. என் கணவர் அணிந்திருந்த செயினும் புதியதல்ல. ஊழியர்களுக்கு ஏற்கெனவே இது தெரியும்.”என்றார்.