சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் புனரமைப்பதால், நீச்சல் குளத்தைக் காலியாக்கி அதனைத் தற்காலிக வேலை இடமாக மாற்றியிருக்கின்றனர்.

குளத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்!

நீச்சல் குளத்தைக் காலியாக்கி, அதில் டெஸ்க்குகள் அமைத்து, ஊழியர்கள் அங்கு அமர்ந்து வேலை செய்கிறார்கள். “டீப் எண்ட்” பகுதியில் வரிசையாக டெஸ்க்குகள், கணினிகள், பவர் பிளக் எல்லாம் அமைத்து அப்படியே குளத்தை ஆபீஸ் செட்டபில் மாற்றி ஊழியர்கள் வேலை செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

ஆனால் இந்த அலுவலக அமைப்பு கவர்ச்சியானது மட்டுமே, இதற்குப் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியேறும் பாதைகள் தடைப்பட்டிருப்பது, தீ விபத்து எச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது போன்ற முக்கியப் பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையின் நடவடிக்கை

இதற்குப் பிறகு Red Star News வெளியிட்ட செய்தியின்படி, தீயணைப்புத் துறை குழுவினர் இந்த அலுவலக அமைப்பை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததைக் கண்டறிந்ததையடுத்து, நிறுவனம் அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY