தங்கமயிலின் 63 & 64வது கிளை சென்னை கௌரிவாக்கம் (gowriwakkam) ஊரப்பாக்கத்தில் (urapakkam) 06.07.2025 அன்று திறக்கப்பட்டது. கிளைகளை நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்ததாஸ், நிர்வாக இணை இயக்குனர்கள் பா ரமேஷ், குமார் மற்றும் பொது மேலாளர்கள் இணைந்து திறந்து வைத்தனர்….
மாமதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் நிறுவனம் (Thangamayil Jewellery Limited) கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. இன்று 35 இலட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் 64 கிளைகளை பரப்பி இந்த மண்ணின் மனம் கவர்ந்த ஒரு ஜுவல்லரியாக மாறியிருக்கிறது.

தங்கமயில் ஜூவல்லரி (Thangamayil jewellery) மிகச் சிறந்த நகைகளுக்கும் மிகக் குறைந்த சேதாரத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவின் மிகமுக்கிய அம்சமாக தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமிற்குள்ளேயே தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை (Bridal store) அறிமுகப்படுத்தி அதில் ‘தங்க மாங்கல்யம்’ என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது.
மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், இரத்தினக் கற்களில் அமைந்த நகைகள் வெள்ளி நகைகள் என்று அனைத்திலும் விதவிதமான திருமண நகைகளின் கலெக்ஷன்களையும், டிசைன்களையும் மிகச் சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் வாங்கிடலாம்.
இதுவரை இல்லாத அளவு எண்ணிலடங்கா திருமண நகை கலெக்ஷன்கள், டிசைன்கள், பிரைடல் செட் என்று தங்கமயில் ஜூவல்லரி தனித்துவமான மற்றும் மிக பிரம்மாண்ட தங்கமாங்கலயம் கலெக்ஷன்களை வடிவமைத்திருப்பது மிகவும் கவனித்தக்க ஒன்று.
‘தரமான சேவை அளிக்க வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பையும் நியாயமான விலைக்கு வழங்க வேண்டும். குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம் பயணிக்க வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு, அதற்கான சரியான திட்டமிடுதல், வழிகாட்டுதல்கள், சிறப்பான சேவைக்கான தேவைகள் என அனைத்தையும் நாங்கள் உருவாக்கி அதன்படி நடந்துவருகிறோம்.
இப்போது சென்னை ஊரப்பாக்கம் (urapakkam) மற்றும் கௌரிவாக்கம் (gowriwakkam) பகுதியில் உங்களுடன் இந்த பயணத்தை துவக்கியிருக்கிறோம். சென்னை மக்களுடைய தேவைகள், விருப்பங்கள் இவற்றின் அடிப்படையில் இந்த ஷோரூமை வடிவமைத்துள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் என்று அனைத்திலும் அதிநவீன வசதிகளை அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமிற்கு மாபெரும் ஆதரவு அளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்று நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பேசும்போது
தங்கமயில் ஜூவல்லரியின் நிர்வாகிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
கிளை திறப்பு விழா சலுகையாக! (opening Offer) ஒவ்வொரு 10 கிராம் தங்கத்திற்கும் ரூபாய் 3000 தள்ளுபடி. வெள்ளி கிலோவிற்கு ரூ 5000 வரை தள்ளுபடி . மேலும் நீங்கள் வாங்கும் வைரம் காரட்டிற்கு ரூ 15,000 வரை தள்ளுபடி..
மேலும் (Savings scheme )சேமிப்பு திட்டத்திற்கும் ஒவ்வொரு பர்சேஸ்க்கும் நிச்சய பரிசினை பெற்றிடுங்கள். இச்சலுகை ஜூலை 27,2025 வரை. மேலும் தொடர்புக்கு 1800 889 7080 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.