Reuters: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

Reuters – இது பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் இந்தியாவின் எக்ஸ் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது, ‘சட்டப்பூர்வமான கோரிக்கை’ என்கிற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதைத் தாண்டி, எதனால் ராய்ட்டர்ஸின் சமூக வலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் வெளியில் தெரியவில்லை.

ராய்ட்டர்ஸும் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Reuters  - முடக்கப்பட்ட எக்ஸ் பக்கம்
Reuters – முடக்கப்பட்ட எக்ஸ் பக்கம்

பொதுவான காரணம்…

பொதுவாக, ஒரு நாட்டின் சட்டத் திட்டங்களை மீறுவதுப்போல, ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் பதிவுகள் இருந்தால், அவர்களது கணக்கை முடக்க, அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிடும்.

அதன் அடிப்படையில், அந்த நாட்டில் குறிப்பிட்ட அந்தக் கணக்கை எக்ஸ் சமூக வலைதளம் முடக்கும்.

இந்தியாவில் முடக்கம்

இந்தியாவில், இந்த மாதிரி, எக்ஸ் கணக்குகளை முடக்கப்படுவது புதிது அல்ல. கடந்த மே மாதம் மட்டும், இந்திய அரசாங்கம் கிட்டத்தட்ட 8,000 கணக்குகளை முடக்கக் கூறி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எக்ஸ் சமூக வலைதளமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.