அமெரிக்கா: இறுதிச்சடங்கில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்ட டாலர்கள்; வைரல் வீடியோவில் பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும் பந்தய கார் ஓட்டுபவருமான டாரெல் தாமஸ் ஜூன் 15 அன்று தனது 58 வயதில் காலமானார்.

இவரின் மரணத்தில் கூட பலரும் அவரை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று இவரின் கடைசி விருப்பத்தை தாமஸ் மகனிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி அவரது இறுதிச்சடங்கின் போது தாமசின் மகன் மேலே ஹெலிகாப்டர் பறக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் மீது ஆயிரக்கணக்கான டாலர்கள் மற்றும் ரோஜா இதழ்கள் தூக்கிவீசப்பட்டன.

US dollars thrown from helicopter during funeral
US dollars thrown from helicopter during funeral

இதுபோன்று ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா இதழ்கள் பறக்க விடுவது குறித்து முன்னரே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொட்டப்படுவது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மரணத்தில் கூட பணத்தைப் பறக்க விடச் செய்யும் தொழிலதிபரின் இறுதிச்சடங்கு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து டாரெல் தாமஸின் மருமகள் கிரிஸ்டல் பெர்ரி கூறுகையில், “இது அவர் சமூகத்திற்கு அளித்த அன்பின் இறுதி வெளிப்பாடு. அவர் ஒரு கொடையாளர். இனிமேல் இப்படிப்பட்டவரைச் சந்திக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்

இந்த வீடியோ உள்ளூர்வாசிகள், இணையவாசிகள் எனப் பலரையும் திகைக்க வைத்துள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR