சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்: ஷேக் ஹசீனாவிற்கு 6 மாதக்கால சிறை; எதற்காக இந்தத் தண்டனை?

வங்க தேசத்தில் ஏற்பட்ட போராட்டத்தின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம், அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் ஆனார்.

இவர் மீது மனித உரிமை மீறல் உள்ளிட்ட ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைகள் வங்க தேசத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

தற்போது வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), ஷேக் ஹசீனாவிற்கு நீதிமன்றத்தால் அவமதிப்பு வழக்கில் 6 மாதக்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sheikh Hasina | ஷேக் ஹசீனா
Sheikh Hasina | ஷேக் ஹசீனா

மனித உரிமை மீறல், பெரிய அளவிலான மக்களை கொல்லுதல் ஆகிய புகாரை கொண்டுள்ள இந்த வழக்கில் தான் ஷேக் ஹசீனாவிற்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர் வங்க தேசத்தில் இருந்து வந்த 11 மாதங்களில், அவருக்கு விதிக்கப்படும் முதல் தண்டனை இதுவே.

ஷேக் ஹசீனாவிற்கு சிறை தண்டனை விதித்திருக்கும் இந்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2009-ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது ஆகும்.