சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமாரின் அம்மாவை எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

“துரதிஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாகத் தாக்கியதால் உங்களுடைய மகன் அஜித்குமார் மரணம் அடைந்துவிட்டார்.
தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம். இது மீள முடியாத ஒரு துயரம்.
தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. பெற்ற தாயிற்குதான் அந்த வலி தெரியும்.
அதனால் நீங்கள் மனம் தளராமல் இருக்க வேண்டும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போதாது. நீதிமன்றத்திலும் அதிமுக சார்பாக வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்.

நீதி நிலைநாட்டப்படும். மனம் தளராமல் இருங்கள். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி போனில் ஆறுதல் கூறியிருக்கிறார்.