சிவகங்கை: ‘என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க’ – உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அண்ணனை மட்டுமின்றி தன்னையும் அடித்ததாக சகோதரர் நவீன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அஜித்குமார்
அஜித்குமார்

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “எங்க அண்ணனை பயங்கரமாக அடிச்சாங்க. என்னையும் ஒரு அரை மணிநேரம் எங்க அண்ணன் முன்னாடி வச்சு அடிச்சாங்க. என்னைய அடிச்சா அண்ணன் உண்மையை சொல்லுவான்னு முழங்கால் போட வச்சு காலில் அடிச்சாங்க” என்று காவல்துறையினர் மீது அஜித்குமாரின் சகோதரர் நவீன் குற்றம் சாட்டி இருக்கிறார். 

அஜித்குமார் இறந்ததைத் தொடர்ந்து ஊர் மக்களும், உறவினர்களும் காவல்துறையினரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY