Trump: “தாக்குதல் நிறுத்தம், வணிக ஒப்பந்தம் ட்ரம்பே அறிவிக்கிறார்; அப்போ இந்தியா?” – ப.சிதம்பரம்

நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாகக் கூறியிருந்தார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“அதிபர் ட்ரம்ப் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தார். அதன் பிறகு, மோதல் முடிவுற்றது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் அதைப் பின்தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

நேற்று ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே ‘மிகப்பெரிய’ வணிக ஒப்பந்தம் நடக்க உள்ளது என்று அறிவித்துள்ளார்.

அடுத்து இனி, இந்தியாவின் வர்த்தகச் செயலாளரிடம் இருந்து இந்த அறிவிப்பு வரும் என்று நினைக்கிறேன்.

எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியாவும், சம்பந்தப்பட்ட மற்றொரு நாடு ஒன்றாக, ஒத்திசைவாக அறிவிக்கும் பழக்கத்தை இந்தியா விட்டுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்ரம்ப் அறிவித்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு இன்னமும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY