CJI BR Gavai: “நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்” – தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…

“கட்டடக் கலை கலைஞர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் தந்தைக்கு வேறு கனவு இருந்தது.

அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டதால், அவரால் வழக்கறிஞராக ஆக முடியவில்லை.

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய்
இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய்

அதனால், அனைத்து பொறுப்புகளும் என் அம்மா, அத்தை மேல் விழுந்தது. எனது தந்தை அம்பேத்கரின் கொள்கைகளுக்கு அவரது வாழ்க்கையைக் கொடுத்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் எதாவது அர்த்தமுள்ளதாகச் செய்வேன் என்று என் தந்தை எப்போதும் நம்பினார்.

என்னுடைய பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டப்போது. என் தந்தை என்னிடம் கூறியது…

‘நீ வழக்கறிஞராக இருந்தால், பணத்திற்குப் பின்னால்தான் செல்வாய். அதுவே நீதிபதியானால், டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்… சமூகதிற்கு நல்லது செய்வாய்’

நாட்டிலேயே உயர்ந்த நீதி பதவியை பெற்றபோது என் தந்தை என்னுடன் இல்லை. ஆனால், என் தாய் இதைப் பார்த்தார்” என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY