‘சியோனிச ஆட்சியை வீழ்த்தி… நசுக்கி’- இஸ்ரேல் – ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, ‘ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?’

இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவில்லை. அது தான் இந்தக் கேள்வி வலுத்துக்கொண்டே வருவதற்கான காரணம்.

இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் நடந்துகொண்டிருந்த போது, அவ்வப்போது காமேனி சமூக வலைதளத்தில் தனது கருத்துகளை சொல்லி வந்தார்.

நிறுத்தம் நடந்த இரண்டு நாள்களுக்கு பிறகு, இன்று தான் காமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது…

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்

“போலியான சியோனிச ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

அடுத்தப் பதிவில், “பல குழப்பங்கள், பல கூற்றுகள் இருந்தாலும், சியோனிச ஆட்சியை இஸ்லாமிய குடியரசு வீழ்த்தி, நசுக்கி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில நிமிடங்களில், தொலைகாட்சியில் தோன்றப் போவதாகவும் காமேனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஈரான் முழுவதும் எழுந்துள்ள கேள்விக்கு விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.