அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? – விசாவிற்கு ‘இந்த’ தகவல் கட்டாயம்! – புது ரூல்

அமெரிக்கா தன் நாட்டுக்குள் வெளிநாட்டினர் அதிகம் குடியேறாமல் இருக்க, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், அந்த நாட்டுக்குள் குடியேறுபவர்கள் அரசுக்கு எதிரான எந்தப் பிரச்னை மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது.

புது கண்டிஷன் என்ன?

அதற்கேற்ற மாதிரி, விசா நடைமுறைகளைக் கடினமாக்கி வருகிறது, அமெரிக்கா. அதில் ஒன்றாக தற்போது அமெரிக்க தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி…

“அமெரிக்க விசாவிற்கு (DS-160 விசா) விண்ணப்பிப்பவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்து சமூக வலைதளங்களின் பயனர் ஐ.டிகளின் பெயர்களை சமர்பிக்க வேண்டும்.

விசா
விசா

மேலும், அந்தத் தரவுகள் சரியானது தான் என்று விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும்.

இந்த சமூக வலைதள தகவல்களைத் தராமல் தவிர்த்தால், அவர்களது விசா விண்ணப்பம் ஏற்றக்கொள்ளப் படாமலும் போகலாம். மேலும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட நபர் விண்ணப்பிக்கும் விசாக்களும் கிடைக்காமலும் போகலாம்”.

எதற்காக இது?

அமெரிக்க தூதரகத்தை சேர்ந்தவர்கள், விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்களா என்பதை இந்த ஐடிகளில் பரிசோதிப்பார்கள். அதன் பின்னரே, விசா வழங்கப்பட வேண்டுமா என்பது முடிவு எடுக்கப்படும்.

DS 16 விசாவை சுற்றுலா செல்பவர்கள், பிசினஸ் செய்ய செல்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தான் விண்ணப்பிப்பார்கள். அதனால், இந்தக் கண்டிஷனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் மக்களே.