Trump: “இஸ்ரேல் – ஈரான் என்னிடம் அமைதி ஏற்படுத்த கோரிக்கை வைத்தது; ஆனால்..” – டிரம்ப் சொல்வதென்ன?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது.

நாளுக்கு நாள் இரு நாடுகளுக்கு இடையேயிலான மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்து வந்தன.

இஸ்ரேல், ஈரான்
இஸ்ரேல், ஈரான்

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் போர்டோ, நடான் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

டிரம்ப்
டிரம்ப்

தற்போது தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அதில், “ஒரே நேரத்தில் இரு நாடுகளும் தன்னை அணுகி அமைதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. இரு நாடுகளும் வருங்காலத்தில் அமைதி, அன்பு, வளர்ச்சியைக் காணும். ஆனால் நீதி மற்றும் உண்மையின் பாதையில் இருந்து விலகினால் இழப்பதற்கும் நிறைய இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY