US Strikes on Iran: “மிகப்பெரிய குற்றம், தண்டிக்கப்பட வேண்டும்” – காமேனியின் முதல் ரியாக்‌ஷன்

ஒரு வாரத்திற்கும் மேலாக, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தின இரவில், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது.

ஈரானை அமெரிக்கா தாக்கிய பின்னர், முதல்முறையாக ஈரானின் உச்சத் தலைவர் அலி ஹொசைனி காமேனி வெளியிட்டுள்ள பதிவில்,

அலி ஹொசைனி காமேனி | Ali Hosseini Khamenei
அலி ஹொசைனி காமேனி | Ali Hosseini Khamenei

“தண்டனைகள் தொடரும். சியோனிச எதிரி பெரிய தவறை செய்துவிட்டார்கள். இது மிகப்பெரிய குற்றம். இது தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படுகிறது. உடனடியாக தண்டிக்கப்படுகிறது”.

‘காமேனியை கொன்றுவிட்டால் பிரச்னை முடிந்துவிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி வருகிறார். ஆனால், ‘அவர் மீது கை வைத்தால் பெரிய பிரச்னை ஏற்படும்’ என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், ‘காமேனி இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்’ என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்த நிலையில், காமேனி ஈரானை தாக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தற்போது பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, இந்தப் பிரச்னை தற்போது முடிவதாக தெரியவில்லை. ஆனால், பிற உலக நாடுகள் விரும்புவது என்னவோ, ‘அமைதியை தான்’.