திருப்பூர்: செல்போனில் கேம் விளையாடியதை எச்சரித்த தாய்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார்.

பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் தனது தந்தை அல்லது தாயின் செல்போனை எடுத்து கேம் விளையாடுவது அல்லது வீடியோக்கள் பார்ப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார் சிறுவன்.

அதுபோலவே, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தனது தாயின் செல்போனை எடுத்து கேம் விளையாடி உள்ளார். அப்போது, அச்சிறுவனின் மூன்று வயது சகோதரர் அழுவததைக் கூட கண்டுக்கொள்ளாமல் சிறுவன் செல்போனில் மூழ்கிக் கிடந்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய், தம்பி அழுவது கூட தெரியாமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என அவரைத் திட்டியதுடன், செல்போனையும் பிடுங்கியுள்ளார்.

suicide
suicide

இதனால் மனமுடைந்த சிறுவன் முருங்கை மரத்துக்குப் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார். மயக்கமடைந்த சிறுவனை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அலங்கியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY