Ramadoss: “பாமக பிரச்னைக்குக் காரணம் திமுக-வா?” – அன்புமணி குற்றச்சாட்டுக்கு ராமதாஸின் பதில் என்ன?

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே, கட்சி அதிகாரத்தில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவுகிறது.

குறிப்பாக, “தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று இந்தக் கட்சியை வளர்த்தவன் நான். என் பேச்சைக் கேட்டு ஒரு செயல் தலைவராக அன்புமணி செயல்படட்டும்” என்று ராமதாஸ் ஒருபக்கம் கூறுகிறார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

மறுபக்கம், “என் மீது கோபம் இருந்தால் மன்னித்துவிடுங்கள். நீங்கள் சொல்வதை கட்சித் தலைவராக நான் செய்கிறேன்” என அன்புமணி கூறிவருகிறார்.

அதோடு, “கட்சியில் நடக்கும் பிரச்னைக்கு ஆளுங்கட்சியின் வயிற்றெரிச்சல்தான் காரணம்” என தி.மு.க-வை அன்புமணி குற்றம்சாட்டினார்.

இத்தகைய சூழலில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் அருள் மற்றும் ஜி.கே. மணி ஆகியோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க ராமதாஸ் இன்று சென்னை வந்தார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸிடம், “பா.ம.க பிரச்னையில் தி.மு.க தலையிடுகிறது என அன்புமணி விமர்சனம் செய்கிறார். தி.மு.க இதில் தலையிடுகிறதா?” எனப் பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு ராமதாஸ், “இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய்” என்று பதிலளித்தார்.

அதைத்தொடர்ந்து, “மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கும் அன்புமணி நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர் கேள்வியெழுப்ப, “அதற்கான முடிவு போகப் போகத் தெரியும்” என ராமதாஸ் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY