`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!’ – எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும் இதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என வரும் ஜூன் 20ம் தேதி அன்று நத்தம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்திருக்கிறது.

மாம்பழம்

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “‘மா’ விவசாயிகள் விவகாரம் – அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் தென் மாவட்ட ‘மா’ விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட கழகத்தின் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

முதலமைச்சர் ஸ்டாலின் ‘விவசாயி’ வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs