Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்’ – வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.

6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், இன்னும் 9 மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில், மருத்துவமனையின் முப்பரிமாண வீடியோவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

மேலும், 2026 ஜனவரியில் மருத்துவமனையின் முதற்கட்டப் பணிகள் முடிவடையும் என்றும், விரிவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, மேம்பட்ட கல்வி, மருத்துவ சேவைகள் ஆகியவை உள்ளடக்கிய இரண்டாம் கட்டப் பணிகள் 2027-ல் முடிவடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.