இஸ்ரேல் – ஈரான் இடையே நிலவும் போர்ப் பதற்றம்; போனில் பேசிய புதின்… என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறந்த நாள். அவரது நண்பரான ரஷ்ய அதிபர் புதின், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“ரஷ்ய அதிபர் புதின் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற காலையில் போன் செய்திருந்தார். மேலும், முக்கியமாக அவருக்கு நன்கு தெரிந்த ஈரான் குறித்தும் பேச அழைத்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ரஷ்யா/உக்ரைன் குறித்து குறைவாகத் தான் பேசினோம். அது குறித்து அடுத்த வாரம் பேசுவோம்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள்
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்கள்

திட்டமிடப்பட்டப் படி, பணயக் கைதிகள் மாற்றத்தை அவர் செய்து வருகிறார். இரு பக்கங்களிலும் இது நடந்து வருகிறது. இந்த போன்கால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு நீண்டது. அவர் இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நான், ‘அவருடைய போரும்’ நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினேன்.”

உலகில் ஏற்கனவே, ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது போர்ப் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.