TVK: “டோல்கேட் வேல்முருகனை வைத்து திமுக கீழ்த்தரமாக ஆடுகிறது!” – தவெக கடும் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது விழா என்ற பெயரில் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்நிகழ்வு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

CTR Nirmal Kumar - TVK
CTR Nirmal Kumar – TVK

இந்நிலையில், தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் வேல்முருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

நிர்மல்குமார் பேசியதாவது, ‘தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து நெகட்டிவ் பப்ளிசிட்டியை பெற்றதில் வேல்முருகன் பெருமை கொள்கிறார். உண்மையில் அவர் வெட்கப்பட வேண்டும்.

அவரை நம்பி மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக்கியிருக்கின்றனர். ஆனால், அவர் இன்னும் டோல்கேட் வேல்முருகனாகவே இருக்கிறார். வேல்முருகன் தன்னுடைய தகுதியை இழந்துவிட்டார். அவர் பேசியதை அவருடைய குடும்பத்துக்கு போட்டுக் காட்டட்டும்.

Velmurugan - Vijay
Velmurugan – Vijay

அவர்களே அது சரியாவென சொல்லட்டும். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்காக இதே மாதிரி பேசும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஆட்டம் ஆடுவதை திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை அவர் இப்படி வக்கிரமாக பேசியதற்காக பல இடங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இங்கே விருது பெறும் பலரும் அரசுப்பள்ளி மாணவர்கள்.

அரசுப்பள்ளி மாணவர்களால் திமுக எம்.எல்.ஏவை அணுகி பாராட்டுப் பெற முடியுமா? ஆனால், எங்கள் தலைவர் அத்தனை பேரையும் நேரில் அழைத்து 10 மணி நேரம் ஒதுக்கி தனித்தனியாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

இதையெல்லாம் ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்காக விமர்சிப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.’ என்றார்.