அகமதாபாத் விமான விபத்து: “இதயம் நொறுங்கி விட்டது…” – பிரதமர் மோடி வருத்தம்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட இந்த விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Plane Crash

Ahmedabad Airplane Accident : ‘விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?’ – நிலை என்ன?

லண்டனின் காட்விக்கை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக Economic Time, Gujart TV 9 போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் பிரதமர் மோடி, “அகமதாபாத் துயர சம்பவம் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது. மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கும் களத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் தொடர்பிலிருந்து உதவிகள் அனைத்தையும் வழங்கி வருகிறோம்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY