“இன்னும் ட்ரம்பை நம்புகிறதா இந்தியா…” – ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பதற்றமான சூழலில், இந்தியா அனைத்துக்கட்சிகளின் தூதுக்குழு ஒன்றை உலக நாடுகளுக்கு அனுப்பி, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள்’ குறித்து விளக்கமளித்து வருகிறது. அதன் அடிப்படிடையில் அமெரிக்கா சென்ற அந்தத் தூதுக்குழு அமெரிக்க அரசுக்கும் விளக்கமளித்தது. ஆனால், அமெரிக்கா மிகத் தெளிவாக ‘எங்களுக்கு இந்தியாவின் உறவும் வேண்டும். பாகிஸ்தான் உறவும் வேண்டும்’ என வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மேலும், ‘இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் பயங்கரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது’ எனவும் தெரிவித்திருக்கிறது.

அமைச்சரிடம் கேள்வி:

இந்த நிலையில், பெல்ஜியம் சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஐரோப்பிய ஊடக வலையமைப்பான யூராஆக்டிவ் நேர்காணல் ஒன்றை நடத்தியது.

அதில், “நீங்கள் (இந்தியா) இன்னும் ட்ரம்பை நம்புகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியது. இந்தக் கேள்விக்கு பொருளென்ன என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் அவர்களிடமே விளக்கம் கேட்டார். அதற்கு அந்த ஊடகவியலாளர், “ட்ரம்ப் தனது வார்த்தைக்கு ஏற்றவாறு நல்லவரா? அவர் இந்தியாவுடன் உறவுகளை தொடர விரும்பும் கூட்டாளியா? அவரின் வார்த்தைகளை எந்தளவு நம்புகிறீர்கள்?” எனக் விளக்கமாக கேள்வி கேட்டது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்:

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “நான் உலகை நான் எப்படிக் காண்கிறேனோ அப்படியே எடுத்துக்கொள்கிறேன். எங்கள் நலன்களைக் காக்க, எங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு உறவையும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். அதன் அடிப்படையில் அமெரிக்கவின் உறவு இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களின் உறவு ஆளுமையாளர்களுக்கு மத்தியில் இல்லை. எங்களின் உறவு இரு நாடுகளுக்கு மத்தியிலானது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY