`2026ல் கூட்டணி ஆட்சி அல்ல; அது பாஜகவின் ஆட்சி…’ – பாஜக அண்ணாமலையின் கூட்டணிக் கணக்கு!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்துக் இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.

ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா - அண்ணாமலை
ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டுவதாக கூட்டணிக்குள்ளேயே சலசலப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இந்நிலையில் இந்த சலசலப்புப் பேச்சுகளுக்குத் தீனிபோடும் வகையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி குறித்துப் பேசுகையில், “2026-ல் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். அது பாஜக ஆட்சி என்றே நான் சொல்வேன். வரும் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவன் நான்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை – அ.தி.மு.க – பா.ஜ.க

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இருப்பினும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன். பாஜகவின் வளர்ச்சிக்காக எப்போதும் பாடுபடுவேன்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs