Los Angeles Riots: பத்திரிகையாளர் தலையில் ரப்பர்க் குண்டால் சுட்ட அமெரிக்க போலீஸ்; வலுக்கும் கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்றமானவர்களுக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் காவல்துறையினரால் ரப்பர்க் குண்டு மூலம் நெற்றியில் சுடப்பட்டுள்ளார்.

நடைபெற்ற தாக்குதல் குறித்துப் பேசிய நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் புகைப்படப் பத்திரிகையாளர் டோபி கான்ஹாம், “நான் அங்கே நின்று எனது வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.

திடீரென அந்த அதிகாரி என்னை நோக்கி துப்பாக்கியைத் திருப்புவதையோ, நானிருக்கும் திசையில் குறிவைப்பதையோ கவனிக்கவில்லை.

அந்தப் பொருள் (ரப்பர்க் குண்டு) மிகவும் விரைவாக என்னை நோக்கி வந்தது. அதன்பிறகு நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. நான் தலையில் குண்டு அடிபட்டு தரையில் விழுந்து கிடந்தேன்” என சி.என்.என் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

குண்டுபட்டதால் அவரது தலையில் அழுத்தமான சிகப்பு தழும்பு பதிந்துள்ளது. மற்றபடி பெரிய அளவிலான காயம் எதுவுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பாதுகாப்புப் படையினரின் இச்செயலுக்குக் கண்டனம் வலுத்துள்ளது.

முன்னதாக இதே போராட்டத்தைக் குறித்து செய்தி சேகரித்துவந்த ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் காலில் ரப்பர் குண்டு சுடப்பட்டது.

‘9 நியூஸ்’ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த லாரன் டோமாசி, ஜூன் 8ம் தேதி களத்திலிருந்தபோது காலில் குண்டடிபட்டு கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY