TVK : ‘முன்னாள் MLA-க்கள்; விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி! – தவெகவில் இணைந்தோர் யார் யார்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று திமுக, அதிமுக சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரும் விஜய்யின் முன்னிலையில் இணைந்திருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

இந்த இணைப்பு விழாவுக்காகவும் எஞ்சியிருக்கும் மா.செக்களை அறிவிப்பதற்காகவும் காலை 11:30 மணியளவில் விஜய் பனையூருக்கு வந்தார்.

தவெகவில் இணைந்தோர் பட்டியல்,

வால்பாறை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன், தற்போது அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார்.(1991-1996 வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.)

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜலட்சுமி, தற்போது பாஜகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். (2011-2016 அதிமுகவின் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்)

திருவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார். (1996-2001 திருவைகுண்டம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்).

அருண் ராஜ்
அருண் ராஜ்

ஓய்வு பெற்ற முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். 2009 யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ ஆர் எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளார்.

நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் மாஜிஸ்திரேட் சுபாஷ், ஜே.பி.ஆர் கல்விக்குழுமத்தை சேர்ந்த மரிய வில்சன் ஆகியோரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.

ராஜலெட்சுமி
ராஜலெட்சுமி

முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜூக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY