மாணவிக்கு பாலியல் தொல்லை: ‘இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் இருப்பார்கள்’ – கீதா ஜீவன்

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு, அந்த விடுதியின்  காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

மாணவிக்கு  கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச்  சந்தித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்திருக்கிறார். “ 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்க முடியாத ஒன்று. அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க உள்ளோம்.

மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால்…

வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால் காவலாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவம் நடந்த விடுதியில் உடனே மூன்று பெண் காவலர்களை நியமிக்க சொல்லி இருக்கிறோம்.

 கீதா ஜீவன்
கீதா ஜீவன்

மற்ற மாணவிகளிடமும் நாங்கள் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர்கள் எல்லாம் விடுதி காவலர் மீது எந்தப் புகாரும் முன்வைக்கவில்லை.  இருப்பினும் முறைப்படி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY