“Out Of Control ஆக இருக்கும் பாலியல் `SIR’-களை எப்போது Control செய்வீர்கள்?” – எடப்பாடி பழனிசாமி

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8-வது வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு, அந்த விடுதியின்  காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

represental images
represental images

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.

பொம்மை முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் “SIR”-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்?

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.