‘மோடியும், அமித் ஷாவும் தமிழகத்துக்கு வர வர… திமுக வாக்குகள் அதிகரிக்கும்’ – ஆ.ராசா சொல்வது என்ன?

திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமான ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆ.ராசா
ஆ.ராசா

டெல்லி, மகாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சு குறித்து பேசிய ஆர்.ராசா, “அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவுபடுத்தும் சூது. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அருவருக்கத்தக்க வகையில் அமித்ஷா பேசி இருக்கிறது.

அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல

அமித் ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அமித் ஷாவின் பேச்சை தமிழக மக்கள் ஒருபோதும் விரும்பவோ, ஏற்கவோ மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நற்பெயரால் அச்சமடைந்து தான் அமித் ஷா தமிழகம் வந்திருக்கிறார். பாஜகவின் எந்தவித மத அரசியலும், பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.

ஆ.ராசா
ஆ.ராசா

திமுக ஆட்சிக்கு அச்சப்பட்டு தான் தமிழகத்திற்கு வந்து அமித்ஷா அவ்வாறு பேசி இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். மோடியும், அமித் ஷாவும் தமிழகத்திற்கு வருவது அதிகரிக்க அதிகரிக்க திமுகவுக்கான வாக்குகள் அதிகரிக்கும்.

திராவிட இயக்க சித்தாந்தம் உள்ளவரை இங்கு பாஜகவால் வெற்றி பெற முடியாது”என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY