Trump Vs Musk : நட்பில் விரிசல்; ‘எலான் மஸ்கிற்கு அடைக்கலம் தர தயார்’ – ரஷ்யா கமென்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நல்ல பிணைப்புடன் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், இப்போதும் எலியும், பூனையுமாக மாறி உள்ளனர்.

இதையடுத்து ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் எலான் மஸ்க்கை, ‘Illegal Alien’ அதாவது, ‘ஆவணம் இன்றி அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எலான் மஸ்க்கை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்க அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிமிட்ரி நோவிகோவ்
டிமிட்ரி நோவிகோவ்

இதுகுறித்து ரஷ்ய அரசியல்வாதியான டிமிட்ரி நோவிகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எலான் மஸ்க் முற்றிலும் வேறு விதமான விளையாட்டை விளையாடுகிறார். அதனால், அவருக்கு அரசியல் புகலிடம் தேவைப்படாது. இருந்தாலும், அவருக்கு எதாவது புகலிடம் வேண்டுமானால், ரஷ்யாவிற்கு அவர் வரலாம். அவருக்கு ரஷ்யா புகலிடம் கொடுக்கும்” என்று நக்கல் தொனியில் பதில் அளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY