Errol musk: அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த எலான் மஸ்க்கின் தந்தை; வணிகக் கூட்டங்களில் பங்கேற்பு!

ஐந்து நாள் பயணமாக இந்தியாவிற்கு எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் வருகை தந்துள்ளார். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளார் எரோல் மஸ்க். தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அவர் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவார்.

நேற்று இந்தியாவிற்கு வருகை தந்த எரோல் மஸ்கிருக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்ப அளிக்கப்பட்ட வீடியோவை பிடிஐ வெளியிட்டிருந்தது.

இந்த வருகையின் போது அயோத்தி ராமர் கோவில், அதன் பின்னர் பல்வேறு வணிக ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும் ஒரு நிறுவன நிகழ்வில் இவர் கலந்து கொள்வார் எனவும் இவருடன் வணிக தலைவர்கள் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகளை சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்துடனான அவரது ஈடுபாட்டை பிரதிபலிக்கும் வகையில், ராம ஜென்மபூமி அயோத்தி ராம் மந்திருக்கும் எரோல் செல்வார் என்று பிடிஐ முன்னதாக கூறப்பட்டிருந்தது.

எரோல் மஸ்க், இந்தியாவில் உள்ள சர்வோடெக்கின் உற்பத்தி சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் எனவும் அவரின் இந்த வணிக வட்டமேசை அமர்வுகள் மூலம் முதலீட்டாளர் குழுக்களுடன் இணைவார் என்றும் PTI தெரிவித்துள்ளது.