DMK: `ஜூன் 3 – செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை’ – திமுக பொதுக்குழுவின் 27 தீர்மானங்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இடைவெளி கூட இல்லாத சூழலில், இப்போதே தேர்தல் வேலையை ஆரம்பிக்கும் வகையில் மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.

ஏழை, எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.

தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக.

கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.

சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.

மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக.

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக.

தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே பெரியது, நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்குச் சட்டமன்ற முடிவுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரமில்லை என்பதையும் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காத்துள்ள மகத்தான தீர்ப்பு குறித்து, உள்நோக்கம் கொண்ட விமர்சனப் பார்வையுடன், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு வன்மையான கண்டனம்.

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ் பெயர்களைச் சூட்டுவோம்.

அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு.

வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க-வையும் விரட்டியடித்து 2026-ல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.