“பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்” – உத்தவ் சிவசேனாவின் விமர்சனமும் பாஜக பதிலும்!

பஹல்காம் தாக்குதல் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. அதற்குப் பிறகு இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எல்லைத் தாண்டிச் சென்று தீவிரவாதிகளைக் கொன்றிருந்தாலும், பஹல்காம் தாக்குதல் நடந்து இன்றுடன் 40-வது நாள். இன்னும் ஏன் பஹல்காம் தாக்குதலை நடத்திய 6 பேர் கைது செய்யப்படவில்லை எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

பஹல்காம்
பஹல்காம்

இது தொடர்பாக சிவசேனா-யுபிடி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்திடம் கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், “திவீரவாதிகள் ஏன் கைது செய்யப்படவில்லை என்றால் அவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கலாம் – அதனால்தான் அவர்கள் பிடிபடவில்லை. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், ஒரு நாள் பா.ஜ.க அலுவலகத்திலிருந்து அந்த ஆறு பேரும் கட்சியில் சேர்ந்ததாக ஒரு செய்திக்குறிப்பு வரும். அதனால் எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்.” என்றார்.

இந்தக் கருத்துக்கு பதிலளித்த பாஜக தலைவர் ராம் கதம்,“உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் போன்ற சிவசேனா-யுபிடி தலைவர்கள் மனம் தளர்ந்துவிட்டனர், அவர்களை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். சஞ்சய் ராவத்தின் கருத்து நமது ஆயுதப்படைகளுக்கு அவமானம்” எனத் தெரிவித்திருக்கிறார்.