‘அது குடும்ப பிரச்னை, அதனால்…’- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று(மே31) சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 

அப்போது பேசிய அவர், “திமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. குறித்த கோரிக்கையை காங்கிரஸ் முன் வைக்கவே இல்லை. அதனால், எங்களுக்கு ஏமாற்றமில்லை. திமுக, காங்கிரஸ் இடையே நல்ல உறவு இருக்கிறது.

சசி தரூர்
சசி தரூர்

சசி தரூர் சிறந்த சிந்தனையாளர், 4 முறை எம்.பி-யாக தேர்வானவர். அவருக்கு கட்சி உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். பாஜக-வுக்கு தமிழக மக்களிடம் பெரிய அளவு ஆதரவு இல்லை.

அண்ணாமலை இருந்தபோது பாஜக ‘ஐ.டி.’ அணி துரிதமாகச் செயல்பட்டது. தற்போது ஐ.டி. அணி செயல்பாடு குறைந்ததால், கட்சி செயல்பாடு இல்லாதது போல் இருக்கிறது. 

அதிமுக கடைக்கோடி தொண்டன் பாஜக கூட்டணியை விரும்பவில்லை” என்றிருக்கிறார். தொடர்ந்து பாமக விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அதற்கு பதிலளித்த அவர், “ பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் ரீதியானதோ கொள்கை ரீதியானதோ அல்ல, அது குடும்ப பிரச்னை. அதனால் அதைப் பற்றி எந்த கருத்தும் நான் கூறமுடியாது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY