PMK : ‘2 முடிவு எடுத்துருக்கேன் ஒன்னு தலைமறைவாவது, இன்னொன்னு…’ – ஜி.கே.மணி வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் – அன்புமணி

“அய்யாவும் (ராமதாஸ்)-சின்ன அய்யாவும் (அன்புமணி)நேரில் சந்தித்துக்கொள்ள  விரும்புகிறேன். அவர்கள் இருவரும் சந்தித்தால் பாமக எழுந்துவிடும்.

பாமக விரிசலுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். இந்தப் பொய்யானத் தகவலைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன். நான் இரண்டு முடிவுகளை எடுத்திருக்கிறேன். ஒன்று தலைமறைவு ஆவது. அப்படி இல்லையென்றால் நான் உயிருடன் இருக்கக்கூடாது.

நான் பாமக-வை விட்டு விலகவுள்ளதாகத் தகவல்களைப் பரப்புகிறார்கள். எனது சட்டமன்ற நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

10.5 % இட ஒதுக்கீடு சட்டமாவதற்கு நான் பட்ட கஷ்டங்களை வெளியே சொல்ல முடியாது. என்னைப் பற்றி அவதூறு பரப்புவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதை அவர்கள் செய்துகொள்ளட்டும்.

ஜி.கே. மணி
ஜி.கே. மணி

பொறுப்பாளர்களை நீக்க வேண்டாம் என்று ராமதாஸிடம் கூறினேன். கட்சியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான  சூழலைத் தீர்க்க கடுமையாகப் பணியாற்றி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY