PMK: “எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்” – நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி உருக்கம்

‘அன்புமணி ஆலோசனை…’

பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.

ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “என்னுடைய இலக்கு, என்னுடைய நோக்கம் எல்லாம் உங்களோடு உங்களில் ஒருவனாகப் பணி செய்வதுதான்.

நம்முடைய இனமான காவலர், சமூகநீதிப் போராளி நமக்கான கொள்கையை வகுத்தவர். சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் என நம்முடைய கொள்கை வழிகாட்டி அவர்தான். அதைப் பின்பற்றி நாம் எல்லாரும் அடுத்தகட்டத்திற்குச் செல்வோம்.

இந்தத் தேர்தலில் நம்முடைய கூட்டணி உறுதியான கூட்டணியாக வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அதன்பின் நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும்.

அதற்கான செயல்திட்டத்தைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். இப்போதைய குழப்பங்களெல்லாம் தற்காலிகமானவைதான்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

என் வாழ்க்கையில் எவ்வளவோ சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன். அவையெல்லாம் என்னை இன்னும் உறுதிப்படுத்தவே செய்திருக்கின்றன” என்றார்.

பா.ம.க-வின் நிறுவனரான ராமதாஸ் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அன்புமணி தலைமைப் பண்பு இல்லாதவர் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY