“குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..” – செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், “முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம்.

கமல்ஹாசன்- உதயநிதி
கமல்ஹாசன்- உதயநிதி

முன் அனுபவம் உள்ளவர்கள் தங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்றிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும்போது குடும்ப அரசியல் குழித்தோண்டி தமிழகத்தைப் புதைக்கிறார்கள் என்று சொன்னீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ” நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கர்நாடக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ” இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY