புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்குதல்; பெண் எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் இடமாற்றம்; பின்னணி என்ன?

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்குத் தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை என்று தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில் அந்த விடுதியில் பணிபுரிந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 ஊழியர்களை விசாரணைக்கு அழைத்த தவளக்குப்பம் போலீஸார், அவர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை செய்திருக்கின்றனர்.

புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்!
புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்!

மறுநாள் மீண்டும் அவர்களை அழைத்த போலீஸார், “நகை கிடைத்துவிட்டது. நீங்கள் யாரும் திருடவில்லை. நீங்கள் போகலாம்” என்று கூறியிருக்கின்றனர்.

அதற்கடுத்த ஒரு சில தினங்களில் கலையரசி என்ற பெண் ஊழியரின் கணவர் திடீரென மயங்கி உயிரிழந்தார்.

அதையடுத்து, “போலீஸார் என்னை நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்கினார்கள். அந்த மன உளைச்சல் காரணமாகவே என் கணவர் உயிரிழந்துவிட்டார்.

அதற்குக் காரணமான பெண் எஸ்.ஐ சண்முக சத்யா, ஏ.எஸ்.ஐ சுரேஷ், காவலர் வசந்த்ராஜ், பெண் ஊர்காவல் படை வீரர் பிருந்தா உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை என் கணவர் உடலை வாங்க மாட்டேன்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார் கலையரசி.

இந்த சம்பவம் குறித்து கலையரசியின் பேட்டியுடன் 01.06.2025 தேதியிட்ட ஜூ.வி இதழில், `பீரியஸ்ட்ஸ்னு சொல்லியும் நிர்வாணமாக்கி அடிச்சாங்க. வதைபட்ட மனைவி… உயிரிழந்த கணவர்… புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்!

அதன் தொடர்ச்சியாகப் பெண் ஊழியர்கள் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தவளக்குப்பம் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பெண் எஸ்.ஐ சண்முக சத்யா, ஏ.எஸ்.ஐ சுரேஷ், காவலர் வசந்த்ராஜ் போன்றவர்களை ஆயுதப் படைக்கும், பெண் ஊர்காவல் படை வீரர் பிருந்தாவை ஊர்காவல் படைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY