“உதயநிதிக்கு ED என்றால் 2011 சட்டமன்றத் தேர்தலிலிருந்தே பயம்” – நயினார் நாகேந்திரன் தாக்கு

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிகிறோம். அதில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

துணை முதல்வரின் நண்பர்கள் ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத் துறை கூறியது.

அவர்கள் லண்டன் சென்று விட்டனர். சிலர் அவர்கள் இங்குத்தான் தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர்.

உதயநிதி நாங்கள் இடி(ED)-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று கூறுகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படிக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது மாடியில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று கொண்டிருக்கும்போதுதான், கீழே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

உதயநிதி
உதயநிதி

அன்றைக்கும் அமலாக்கத்துறைக்குப் பயந்து தான் பேச்சுவார்த்தை முடித்தார்களா எனத் தெரியவில்லை. அதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போதிருந்து அமலாக்கத்துறை மீது பயம் உள்ளது.

பயம் இல்லை என்றால் ரித்திஷ், ஆகாஷ் எதற்காக தலைமறைவாக வேண்டும். ராஜ்யசபா தேர்தல் கூட்டணி குறித்து எங்களின் தலைமைதான் முடிவு செய்யும்.

தி.மு.க ஆட்சியில் மக்கள் சிரமப்படுகிறார்கள். சொத்துவரி உயர்வு, ஆண்டுக்கு ஒரு முறை 6 சதவிகிதம் மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் தொழிற்சாலைகள் நடத்த முடியாத நிலை உள்ளது.

அரிவாள் ராஜ்ஜியம்… சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு!

கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் ஆகியவற்றால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY