Chennai: விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்; பதறிய விமானி; காவல்துறை விசாரணை; என்ன நடந்தது?

326 பயணிகளுடன் துபாயிலிருந்து ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.

சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது.

அப்போது பரங்கிமலை பகுதியிலிருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.

இதனால் பதறிய விமானி அடுத்த சில வினாடிகளில் விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார்.

உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம்
விமானம்

பின் ரேடர் கருவியினால், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில வினாடிகளில் அந்த ஒளி நின்று விட்டது.

இதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை விமானம் தரையிறங்க அனுமதி அளித்து தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் சிலநிமிடத்தில் சென்னை விமான நிலையத்தைப் பரபரப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk