“உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகணும்; தவறு செய்தவர்கள்..” – ED ரெய்டு குறித்து எல்.முருகன்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் அமலாக்கத்துறைச் சோதனைக் குறித்து பேசியிருக்கிறார்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

“அமலாக்கத் துறையின் சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. எங்கு தவறு நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு அமலாக்கத் துறை விசாரிக்கிறது. ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாவார்கள்.

உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோலத் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs