அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது கேபிடல் யூத அருங்காட்சியகம். அங்கு நடந்த விழாவில் இஸ்ரேலிய தூதரக உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது விழா நடந்துகொண்டிருந்த இடத்துக்கு வெளியே இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இஸ்ரேலிய தூதரக உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
அவர்கள் இருவருக்கும் இன்னும் சில வாரங்களில் திருமணம் நடக்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய வாஷிங்டன் காவல்துறை அதிகாரி, “பாலஸ்தீனத்துக்குச் சுதந்திரம்’ எனத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கூச்சலிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்கள் கைது செய்யப்பட்டப்பிறகு துப்பாக்கி இருக்கும் இடம் குறித்தும் தகவல் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நடந்த 30 நிமிடத்தில், சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டடிருக்கிறார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக சமூக ஊடகத்தில் எழுதிய அதிபர் ட்ரம்ப், “இந்தத் தாக்குதல் வெளிப்படையாக யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த கொடூரமான கொலைகள் இப்போதே முடிவுக்கு வர வேண்டும்! வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.