துபாயில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக புதிய விதிகளை விதித்துள்ளது மத்திய அரசு.
அதன் படி, இந்தியா – ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், முகவர் நிறுவனங்கள், தகுதிவாய்ந்த நகைக்கடைக்காரர்கள் மற்றும் கட்டண விகித ஒதுக்கீடு (TRQ) வைத்திருப்பவர்கள் மட்டுமே இனிமேல் துபாயிலிருந்து தங்கம் இறக்குமதியை செய்ய முடியும்.
இந்தக் கட்டுப்பாடுகள் வெட்டப்படாத, பகுதியளவு பதப்படுத்தப்பட்ட, தூளாக உள்ள தங்கம் மற்றும் வெள்ளிகளுக்குப் பொருந்தும்.

சி.இ.பி.ஏ-ன் கீழ், பலர் சட்டவிரோதமாக, தங்கத்தைப் பிளாட்டினம் என்று கூறி இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வந்தனர். இதைத் தடுக்கவே, இப்போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி, சி.இ.பி.ஏ-ன் கீழ், பிளாட்டினத்தை இறக்குமதி செய்ய ஒத்திசைவு நடைமுறை (Harmonised System) பின்பற்றப்படும். அதாவது, பிளாட்டின இறக்குமதிகளுக்கு ஒரு எண் வழங்கப்பட்டு, அதன் படி இறக்குமதி நடக்கும். இந்த நடைமுறை குறித்து கடந்த மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஒத்திசைவு நடைமுறை 99 சதவிகித அல்லது உயர் தர பிளாட்டின இறக்குமதிகளுக்குப் பின்பற்றப்படும்.
ஆக, இவைகளின் மூலம் மோசடி தங்கம் இறக்குமதியைத் தடுக்கமுடியும்.