ஆபரேஷன் சிந்தூர்: `ஜெய்சங்கரின் மௌனம் மிகவும் மோசமானது; தேசத்துக்கு உண்மை…’ – ராகுல்

சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “நாங்கள் ஆபரேஷனை தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு, ‘நாங்கள் தீவிரவாத தளவாடங்களை அழிக்க உள்ளோம். பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க மாட்டோம்.

அதனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்த விஷயத்தில் இருந்து தள்ளி நின்று இந்த நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்கலாம்’ என்ற செய்தியை அனுப்பினோம். ஆனால், அவர்கள் அந்த நல்ல அறிவுரையை ஏற்கவில்லை” என்று பேசியிருந்தார்.

 ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

கடந்த சனிக்கிழமை (மே 17) அந்த வீடியோவைப் பகிர்ந்து, மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தானிடம் அது குறித்து பகிர்வது குற்றம்.

அதை மத்திய அரசு செய்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார்.

1. யார் இதை அனுமதித்தது?

2. இதனால், இந்தியா விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அதனால், அந்தப் பதிவை ராகுல் காந்தி இன்று மீண்டும் பகிர்ந்து கூறியுள்ளதாவது…

“மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் மௌனம் வெறும் சொல்வதாக மட்டுமல்ல… மிகவும் மோசமானது.

அதனால், மீண்டும் கேட்கிறேன்: பாகிஸ்தானுக்கு இது முன்னரே தெரிந்ததால், எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்?

இது தவறு மட்டுமல்ல. இது ஒரு குற்றம். தேசத்திற்கு உண்மை தெரிய வேண்டும்” என்று கேள்வி கேட்டுள்ளார்.