`எங்களுக்கு எதிரான வன்மம், ஸ்டாலின் DNA-விலேயே உள்ளது..’ PMK BALU Interview

பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதில் ஓபனாகவே கடுமை காட்டி இருந்தார் ராமதாஸ். கட்சியினருக்கு பாடம் எடுத்திருந்தார். அது அன்புமணிக்கு எதிரான பேச்சு என்றும் பேசப்பட்டது ஆனால் ‘அப்படியெல்லாம் இல்லை’ என மறுக்கிறார் பாமகவின் செய்தி தொடர்பாளர் கே.பாலு.

இந்த மாநாட்டில், எம்எல்ஏக்களை கடுமையாக விமர்சித்து இருந்தார் ராமதாஸ். பின்னணியில் ராஜ்யசபா எம்பி சீட் கணக்கும் குடும்ப பஞ்சாயத்தும் உள்ளதா? ஏன் வேண்டும் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு? சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் ஆழமாக தமது நேர்காணலில் பதில் தெரிவித்துள்ளார் பாமகவின் பாலு.